கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கை நீட்டிக்குமாறு டிவிட்டரில் #ExtendTheLockdown என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டர்வாசிகள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுவதையே மக்கள் விரும்புவதாக தெரிகிறது. ஏனெனில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ExtendTheLockdown என்ர ஹேஷ்டேக்கை டிவிட்டர்வாசிகள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
மேலும், தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 3 வரை நீட்டிக்கப்படுவதாக தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.