Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர் காலம் கொரோனா வீரியத்தை அதிகரிக்கும் ஆபத்து...

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (13:03 IST)
பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலம் என்பதால் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில் அமைச்சர் ஹர்ஷவர்தன் பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, எந்த மதமும், கடவுளும் பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட வலியுறுத்தவில்லை. இப்போது வருவது குளிர் காலம். குளிர்காலத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வரும் பண்டிகை காலத்தை யாரும் கொண்டாட கூடாது. மாறாக பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாடுங்கள் என அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments