Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிகரமாக ஓடும் க பெ ரணசிங்கம் திரைப்படம் – மணிரத்னம் படத்தின் தழுவலா?

Advertiesment
வெற்றிகரமாக ஓடும் க பெ ரணசிங்கம் திரைப்படம் – மணிரத்னம் படத்தின் தழுவலா?
, திங்கள், 12 அக்டோபர் 2020 (10:55 IST)
விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.
webdunia


இந்நிலையில் இந்த திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் தழுவல் என சொல்லப்படுகிறது. அந்த படத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தன் கணவனை தனி ஆளாக போராடி மீட்டு வருவார் நாயகி. ஆனால் இரண்டு கதைகளும் நடக்கும் தளம் வேறு என்பதால் அதை இரண்டையும் ஒப்பிடமுடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு சினிமாவின் இரண்டாம் குத்து – ராம்கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள்!