இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில் மாநில அரசு கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தமிழகத்தில் இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா சான்றிதழ் இல்லாத தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென்றும் அவ்வாறு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.