Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

Advertiesment
10 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
, சனி, 20 நவம்பர் 2021 (09:56 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,302 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,99,925 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 267 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,65,349 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,787 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,09,708 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,24,868 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
அதோடு இந்தியாவில் 1,15,79,69,274 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 51,59,931 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மீண்டும் சரிந்தது தங்கம் விலை!