Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா! - மகாராஷ்டிராவில் ஒருவருக்கு புதிய வைரஸ்..!!!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (13:22 IST)
கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  குறிப்பாக கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கேரளாவில் மேலும் 300 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,341 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட கோவிட்-பாசிட்டிவ் மாதிரிகளில் 21 பேருக்கு ஜே.என்.1 வகை உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும், கோவாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயது நபருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு லேசான பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது எனவும், அதேசமயம் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments