Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளொன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்புகள்! – மோசமான சூழலில் இந்தியா!

நாளொன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்புகள்! – மோசமான சூழலில் இந்தியா!
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:29 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாளுக்கு 1 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் உலக அளவிலான பாதிப்பில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 90 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில் உலகளவில் அதிகமான கொரோனா பாதிப்புகள் கொண்ட நாட்டில் இந்தியா இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 42,80,423 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,133 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 8,83,637 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 33,23,951 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரியர் பசங்களுக்கு பாஸ் போட முடியாது! – அரசுக்கு எதிராக வழக்கு