Webdunia - Bharat's app for daily news and videos

Install App

76 லட்சத்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்திய நிலவரம்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:21 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 82 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 82,67,623 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,23,097 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 76,03,121 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,41,045 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி இனியும் இந்தியாவின் தலைநகராக இருக்க வேண்டுமா? - சசிதரூர் கேள்வி

மகாராஷ்டிரா டூ தெலுங்கானா.. துணை தேடி 300 கி.மீ அலையும் ஜானி புலி!

பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தற்கொலை..!

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments