70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்தியா நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (09:59 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 70 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments