Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

61 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!

61 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (10:21 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 61 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 61,45,292 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 776 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 96,358 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 51,01,398 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,47,576 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் வேட்பாரை அறிவிக்கும் திராணி இல்லை... தங்க தமிழ்செல்வன் விமர்சனம்!