கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஓடிடி ரிலீஸ் தான். இந்த ஓடிடியில் ஏற்கனவே தமிழ் படங்கள் உள்பட பல திரை மொழி திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ திரைப்படமும் நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாகவும் அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.5 கோடி என்ற நிலையில் ரூபாய் 10 கோடிக்கு இந்த படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 5 கோடி லாபம் என்றும் கூறப்படுகிறது
மேலும் சாட்டிலைட் ரைட்ஸ், ஹிந்தி டப்பிங் உரிமை ஆகியவைகளை கணக்கில் சேர்த்தால் 8 கோடி முதல் 10 கோடி வரை தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின்’ திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ்க்கு ரூபாய் 5 கோடிக்கு மேல் லாபம் கிடைத்தது என்று கூறப்பட்டது. எனவே கீர்த்தி சுரேஷின் படங்கள் கோடிக்கணக்கில் லாபம் பெற்று கொடுப்பதால் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது