Publish Date: Thu, 13 Jan 2022 (10:42 IST)
Updated Date: Thu, 13 Jan 2022 (10:44 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 2.5 லட்சம் பாதிப்புகளை நெருங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 380 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 84,825 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34715361 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1117531 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 1,54,61,39,465 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,32,024 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.