இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. 
	
	
	 
	இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
	 
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. புதிதாக 11,466 பேர் பாதித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,466 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,88,579 ஆக உயர்ந்தது.
	 
	மேலும் கொரோனா வைரஸால் புதிதாக 460 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,61,849  ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,961 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,87,047 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.