Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

39,000-த்திற்கு கீழ் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு - இந்திய நிலவரம்!

39,000-த்திற்கு கீழ் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு - இந்திய நிலவரம்!
, சனி, 17 ஜூலை 2021 (09:42 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் தற்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,079 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,10,64,908 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 560 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,091 ஆக உயர்ந்தது.
 
அதோடு கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 43,916 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,02,27,792 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,24,025 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகதாதுவில் 100% புதிய அணை கட்டுவது உறுதி - எடியூரப்பா !