Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

68 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேர நிலவரம் என்ன?

Advertiesment
68 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேர நிலவரம் என்ன?
, வியாழன், 8 அக்டோபர் 2020 (10:15 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 68 லட்சத்தை கடந்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் 78,524  பேருக்கு கொரோனா தொற்று உறுதி நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 971 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,05,526  ஆக உயர்ந்துள்ளது.
 
அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 58,27,705 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 83011 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிஐ முன்னாள் இயக்குநர் தற்கொலை: இறுதிக் கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!