Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஐ முன்னாள் இயக்குநர் தற்கொலை: இறுதிக் கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

Advertiesment
சிபிஐ முன்னாள் இயக்குநர் தற்கொலை: இறுதிக் கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!
, வியாழன், 8 அக்டோபர் 2020 (10:07 IST)
சிபிஐ முன்னாள் இயக்குநர் தற்கொலை: இறுதிக் கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!
இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஷ்வனி குமார் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக பதவி வகித்ததோடு, கடந்த 2013-14 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களின் கவர்னராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் ஓய்வுக்கு பின் தனது குடும்பத்தினர்களுடன் சிம்லாவில் வசித்து வந்த நிலையில் திடீரென அஸ்வனி குமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது ஆத்மா புதிய பயணத்தை தொடங்கியிருப்பதாகவும், எனவே தனது உடலுக்கு எந்த சடங்குகளும் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் ஆளுனர் மற்றும் சிபிஐ அமைப்பின் இயக்குனர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது எப்படி எடப்பாடியார் முதல்வர் வேட்பாளராக முடியும்? பொன்னார் சுளீர் கேள்வி!