Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 லட்சத்தை நோக்கி முன்னேறும் தினசரி பாதிப்புகள் – கவலையளிக்கும் இந்திய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (09:41 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,87,62,976 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,498 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,08,330 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 31,70,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments