Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 லட்சத்திற்கு கீழ் குறைந்த சிகிச்சை எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா!

3 லட்சத்திற்கு கீழ் குறைந்த சிகிச்சை எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா!
, ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:03 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,732 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,01,87,850 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 279 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,47,622 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97,61,538 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,78,690 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு கொடுத்த இலவச அரிசியை வித்துட்டாங்க! – அமைச்சர் மீது ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!