ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (18:03 IST)
இந்தியா கூட்டணியின் அங்கமாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இருந்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸ் சர்ச்சை கருத்து கூறியுள்ளது.
 
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த எதிர்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்த நிலையில், அந்த கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. வேட்பாளர்களையும் தற்போது அறிவித்து வருகிறது.
 
இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் என்பவர் கூறியபோது, "கெஜ்ரிவாலை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு பார்சிவால் என கூறலாம். டெல்லியில் நிலைமை மோசமானதற்கும் காங்கிரஸ் பலவீனம் அடைந்ததற்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததே காரணம். அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வரும் நிலையில், இனியாவது டெல்லியில் தனித்து போட்டியிட வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments