அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை எக்ஸ் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு எக்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது, அமித்ஷா உரையின் வீடியோ பதிவை நீக்குமாறு பாஜக அரசு எக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், பேச்சு சுதந்திரத்தை காரணம் காட்டி மத்திய அரசின் இந்த கோரிக்கையை எக்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.