கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

Mahendran
செவ்வாய், 22 ஜூலை 2025 (10:58 IST)
கேரளாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், இந்து பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்து ஈழவ சமுதாய தலைவரான வெள்ளப்பள்ளி நடேசன் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைமை கூட்டத்தில் பேசிய நடேசன், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக உதவி செய்வதாகவும், இந்துக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
ஆலப்புழா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்துக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை குறைத்ததால் வாக்குகள் குறைந்ததாகவும், ஆனால் அதே நேரத்தில் மலப்புரம் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் மக்கள்தொகையை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
"எனவே அன்பான இந்து சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறைக்க வேண்டாம்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதே ரீதியில் சென்றால் கேரளா விரைவில் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறிவிடும் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments