Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

Advertiesment
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  நடைபெறும் தேதி அறிவிப்பு!
, புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:54 IST)
காங்கிரஸ் கட்சியில் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி கூடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று இரண்டாவது முறையாக உறுதியானது. எனவே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்விக்குப் பின் அக்கட்சியை சீர்படுத்த வேண்டுமென கட்சிக்குள் மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அப்போது பதவியை விட்டு விலகிய ராகுலை மீண்டும் தலைவராக வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில்  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிருப்தியில் இருந்த 23 பேர் கீழ் மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வரை   நடத்தும்படி ஒரு கடிதம் எழுதினர்.

 கீழ்மட்ட தேர்தல் முடிந்த நிலையில், அடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடக்கவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்தது.

ஒருவேளை ராகுல் போட்டியிட்டால் அவர் தேர்வாகலாம், ஆனல் அவர் பிரியங்காவை தலைவராக முன்னிறுத்துவார் எனத் தெரிகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடி: நாளை அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை