Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் எம்எல்ஏவின் கன்னத்தில் பளார் என அறைந்த பெண் போலீஸ்!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (18:01 IST)
இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஒருவர் பெண் போலீஸ் ஒருவரின் கன்னத்தில் அறைய அந்த பெண் போலீஸும் சற்றும் தாமதிக்காமல் அந்த எம்எல்ஏவின் கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் நடந்துள்ளது.
 
நடந்து முடிந்த இமாச்சலபிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய சென்றார்.

 
அப்போது ராகுல் காந்தியை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஆஷா குமாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் எம்எல்ஏ ஆஷா குமாரி பெண் போலீஸ் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.
 
உடனே சற்றும் தாமதிக்காமல் அந்த பெண் போலீஸ் காங்கிரஸ் எம்எல்ஏ பெண் எம்எல்ஏ ஆஷா குமாரியின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments