உன்னாவ் சம்பவம்: இறந்த பெண்ணின் தாயார் காங்கிரஸ் வேட்பாளர்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (14:32 IST)
உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 50 பெண்கள் உட்பட 125 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. 

 
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் மறுபுறம் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
இந்நிலையில் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி இன்று வெளியிட்டார். முதல்கட்ட பட்டியலில் மொத்தம் 125 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
இதில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ஊதிய உயர்வு போராட்டத்திற்கு தலைமை ஏற்ற பூனம் பாண்டே உள்ளிட்ட 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள், 40 விழுக்காடு இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியதுவம் பெற்ற இந்த முயற்சியால், உத்தரபிரதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று ப்ரியங்கா இது குறித்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கொடுத்த பணத்தில் இழப்பீட்டு பணத்தில் மருமகன் கொண்டாட்டம்! மாமியார் கதறல்!

10 மாத குழந்தைக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு.. குலுக்கலில் கிடைத்த அதிர்ஷ்டம்..!

பயிர்ச்சேதமோ ரூ.72,466.. அரசு கொடுத்த இழப்பீடு வெறும் ரூ.2.30.. அதிர்ச்சி அடைந்த விவசாயி..!

டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா? மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்