கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 1184 வார்டுகளில் 498 வார்டுகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து அக்கட்சியினர் தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்
கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை 437 வார்டுகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 வார்டுகளிலும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 24 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அம்மாநிலத்தின் ஆட்சியையும் பிடித்துவிடலாம் என்ற எண்ணம் தற்போது தோன்றியுள்ளது