காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்கள் சொல்வது என்ன?

Siva
புதன், 1 அக்டோபர் 2025 (10:45 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கார்கேவின் வயதை கருத்தில் கொண்டு, இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
83 வயதான கார்கே காய்ச்சல் மற்றும் கால் வலி காரணமாக பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் முழுமையான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும், அவர் நலமாக இருக்கிறார், கவலைப்பட ஒன்றுமில்லை, மருத்துவர்கள் அவரது நிலையைக் கண்காணித்து வருகின்றனர்," என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையும், மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரியில் சுகாதாரமற்ற நீர்! 7 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்! - கல்லூரியை மூட உத்தரவு!

தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments