மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்பானி அதானி குறித்து கூறிய போது பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் அம்பானி, அதானி என்று கூறுவதற்கு பதிலாக A1, A2 என்று கூறியது மக்களவையில் சிரிப்பலைகளை வரவழைத்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் ஆவேசமாக பேசினார் என்பதும் அம்பானி, அதானிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார். அப்போது அம்பானி அதானி பெயர்களை குறிப்பிடக் கூடாது என அவை தலைவர் கூறினார்.
இதனை அடுத்து அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக A1, A2 என குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து தொடர்பாக இரண்டு பெரிய ஒப்பந்தங்கள் A1, A2 ஆகிய இருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பல துறைகள் A1, A2க்கு சென்றுவிட்ட நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வே துறையும் அவர்களிடம் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்