பாஜக கோட்டையை காலி செய்த காங்கிரஸ்-மஜத: கர்நாடகாவில் பெரும் பரபரப்பு

புதன், 7 நவம்பர் 2018 (08:05 IST)
கர்நாடகத்தில் பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த பெல்லாரி தொகுதியை  காங்கிரஸ் - மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது.
 
கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா,பெல்லாரி மாண்டியா ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராம் நகர்,ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. 
 
இதன் முடிவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி பெல்லாரி, மாண்டியா ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளையும் ராம் நகர், ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. குறைந்த வாக்குவித்தியாசத்தில் ஷிமோகா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
 
1999களிலிருந்து பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வந்த பெல்லாரி தொகுதியை இம்முறை காங்கிரஸ் - மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி போல் காங்கிரஸ் வெற்றி: ப.சிதம்பரம்