தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

Siva
புதன், 12 நவம்பர் 2025 (09:53 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷகீல் அகமது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது பீகார் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வாக்குப்பதிவுக்கு முன் விலகல் அறிவிப்பால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காகவே காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஐந்து முறை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யாகப் பதவி வகித்த ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில், தனது விலகல் "கனத்த இதயத்துடன்" எடுக்கப்பட்ட முடிவு என குறிப்பிட்டுள்ளார்.
 
உடல்நல குறைவே விலகலுக்கு காரணம் என்று கூறியுள்ள அவர், வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும், காங்கிரஸின் கொள்கைகளில் தனக்கு இறுதிவரை நம்பிக்கை உண்டு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

தீபாவளிக்கே வெடிக்க வேண்டிய வெடிகுண்டு.. கைதான நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!

போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!

தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள்.. குற்றவாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்: காவல் துறை ஆணையர்

தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments