வயநாடு சென்றது போல் பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் செல்ல வேண்டும்: காங்கிரஸ்

Siva
சனி, 10 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
பிரதமர் மோடி வயநாடு சென்றது போல் மணிபூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் பலியான நிலையில் இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றும் அதேபோல் வயநாடு சென்றுள்ள பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் நாங்கள் பொதுமக்களின் பிரச்சனைகளை திறமையாக விவாதித்தோம் என்றும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வலுவான எதிர்க்கட்சியை நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த உண்மையை கண்டு ஆளும் அரசு அஞ்சுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை என்றும் நாடாளுமன்ற அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வழங்குகிறார்கள் என்றும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ராகுல் காந்தியை சந்தித்து தான் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments