ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படும் நிலையில், அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மட்டும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் உயர்ந்து ரூ.1980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்ந்ததால், உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருவது ஹோட்டல் மற்றும் உணவக அதிபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1980.50 என விற்பனையானாலும், மும்பையில் ரூ.1771, கொல்கத்தாவில் ரூ.1927, மற்றும் டெல்லியில் ரூ.1818 என விற்பனையாகி வருகிறது.
அதே நேரத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.