பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காமெடி நடிகர் சியாம் ரங்கீலா என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா என்பவர் போட்டியிட சமீபத்தில் வேட்பாளர் தாக்கல் செய்தார். இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் என்பதும் ராகுல் காந்தி, மோடி போல் மிமிக்ரி நகைச்சுவை நிகழ்ச்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவரது நிகழ்ச்சிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஷ்யாம், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேசையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அவரது வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளது. அவர் தாக்கல் செய்த ம் பிரமாண பத்திரத்தில் குறைகள் இருந்ததாகவும் வேட்பாளர் பின்பற்ற வேண்டிய நடைமுறை சம்பிரதாயங்களை அவர் பின்பற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.