சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல் வெளியானது. மேலும் விட்டதை மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து விளையாடி இழந்த பணத்தை நிலையில் இழந்த பணத்டஹி மீட்க தந்தையிடம் ரூ.24,000 தனுஷ் கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தந்தை ரூ.4,000 மட்டுமே கொடுத்த நிலையில் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறிய நிலையில் அதன் பின்னரும் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை அதிகரித்து வருவது மசோதாவுக்கான நோக்கத்தையே கேள்விக்குறி ஆக்கி உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்றால் அந்த விளையாட்டை விளையாட முடியாத வகையில் தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக செயலிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.