பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு உத்தரவு

திங்கள், 6 ஜூலை 2020 (20:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக ஐந்து கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் உட்பட அனைத்து பள்ளிகளின் தேர்வு ரத்து செய்யப்பட்டன. அதேபோல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கல்லூரிகளிலிருந்தும், பல்கலைக்கழகத்தில் இருந்தும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய உயர்கல்வித் துறை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் யூஜிசி வழிகாட்டுதலின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து யுஜிசி ல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தும் தேதியை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென அந்த தேர்வு நடத்த திட்டமிட்டு வருவதாக வெளிவந்திருக்கும் செய்தியால் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஜூலை 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – ஆந்திர அரசு