Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்கொலை செய்து கொண்ட காஃபி டே சித்தார்த் மகன் திருமணம்: அரசியல்வாதி மகளை மணக்கிறார்

Advertiesment
தற்கொலை செய்து கொண்ட காஃபி டே சித்தார்த் மகன் திருமணம்: அரசியல்வாதி மகளை மணக்கிறார்
, வெள்ளி, 5 ஜூன் 2020 (07:53 IST)
காஃபி டே சித்தார்த் மகன் திருமணம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் காஃபி டே தொழிலதிபர் சித்தார்த். இவர் மறைந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் தற்போது அவருடைய மகன் டி.கே.சிவகுமார் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
சித்தார்த்தின் மகன் டிகே சிவகுமார் என்பவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் என்பவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய உள்ளார். மணமகள் ஐஸ்வர்யா தற்போது தனது தந்தையின் குளோபல் அகாடெமி ஆப் டெக்னாலஜி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தந்தை சித்தார்த் மறைவு காரணமாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருந்த டிகே சிவகுமார் தற்போது அந்தப் பிரச்சினையிலிருந்து ஓரளவு மீண்டு விட்டார் என்றும் இதனை அடுத்து திருமணத்திற்கு சம்மதித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் சித்தார்த் உயிரோடு இருக்கும்போதே இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் அவருடைய மறைவு காரணமாகவே ஓராண்டு இந்த திருமணம் கால தாமதமாக நடைபெறுவதாகவும், இப்போது நேரம் கைகூடி இருப்பதால் இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் சித்தார்த்தின் குடும்பத்டினர் கூறியுள்ளனர். இந்தத் திருமணம் நடைபெறும் தேதி குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளிவரும் என இரு வீட்டார் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஸ்வதேஸ்’: வெளிநாட்டில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு!