இன்று செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம்.. வானிலை சாதகமாக இருக்குமா?

Mahendran
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (11:06 IST)
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் புயல் காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில், டெல்லியில் இன்று செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இன்று செயற்கை மழைக்காக மேக விதைப்புச் சோதனை நடத்தப்படும் என்றும், வானிலை சாதகமாக இருந்தால் மட்டுமே செயற்கை மழை சாத்தியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
மேக விதைப்புக்கு பொருத்தமான மேகங்கள் இல்லாவிட்டால், மேக விதைப்பு சோதனை கிடையாது என்றும், ஆரம்பத்தில் ஜூலை மாதமே திட்டமிட்டிருந்த இந்த செயற்கை மழை தற்போதுதான் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பாஜக தலைமையிலான மாநில அரசு தனது தேர்தல் அறிக்கையில் மேக விதைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதிமொழி கொடுத்திருந்த நிலையில், அந்த உறுதிமொழியை இன்று நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments