Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் இருந்து நேபாளம் செல்ல வெறும் 3 மணி நேரம்.. ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் வேலைகள்..!

Advertiesment
டெல்லி

Siva

, வியாழன், 22 மே 2025 (09:28 IST)
பீகாரின் ராக்சவுல் முதல் நேபாளத்தின் காட்மாண்டு வரை புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளன. இதன் மூலம், டெல்லியில் இருந்து நேபாள தலைநகரான காட்மாண்டுவிற்கு நேரடி ரயில்சேவை விரைவில் தொடங்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
 
மொத்தம் 136 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த ரயில்வே பாதைக்கு ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற உள்ளன. இந்த பாதையில் 13 ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. ஏற்கனவே ராக்சவுல், டெல்லியுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்த புதிய பாதை முழுமையாக முடிந்ததும் டெல்லி-காட்மாண்டு நேரடி இணைப்பு அமையும்.
 
இந்த திட்டத்திற்கான லோகேஷன் சர்வேயை கோங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் துவக்கியுள்ளது. இந்த பரிசோதனைக்காக மட்டும் ரூ.37 கோடி செலவிடப்படுகிறது. இப்பரிசோதனை முடிந்ததும், முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் பிறகு பாதை அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகள் துவங்கும்.
 
2023ஆம் ஆண்டு இந்த 136 கி.மீ பாதைக்கான ஆரம்ப பரிசோதனை நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு டெல்லி-காட்மாண்டு ரயில்வே திட்டத்துக்கான முயற்சி ஆரம்பமானது.
 
தற்போது நிலம் வசதி மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் பரிசோதிக்கப்படுகின்றன என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ராக்சவுல் முதல் காட்மாண்டு வரை புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்லியில் இருந்து காத்மண்ட் செல்ல வெறும் 3 மணி நேரம் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் இருந்து 12 நிமிடங்கள் தான்.. இஸ்லாமாபாத் காலி.. ப்ரமோஸ் பவர் இதுதான்..!