Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்தில் திருத்தமா? அமித்ஷாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (09:20 IST)
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக இதுவரை அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதிலும் பல இடங்களில் வன்முறை, பேருந்து எரிப்பு மற்றும் ரயில் எரிப்பு ஆகிய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தம் செய்ய தயார் என அமித்ஷா அறிவிப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளோ திருத்தம் தேவை இல்லை என்றும் குடியுரிமை சட்டத்தை மொத்தமாகவே ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன 
 
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் முஸ்லிம் நாடுகள் என்றும் அந்த நாட்டில் இருந்து அகதிகளாக முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இல்லை என்று இந்தியாவில் ஊடுருவி பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவதற்கான மசோதா இது என்றும் இந்த சட்டத்தை எதிர்ப்பது நாட்டின் பாதுகாப்பின்மையை கேள்விக்குறியாக்கும் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்
 
பாஜக ஒருபக்கம் பிடிவாதமாக இந்த சட்ட மசோதாவில் உறுதியாக நிற்பதும், இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதால் இதன் முடிவு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments