Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு

Advertiesment
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு
, ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (11:33 IST)
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடக்கும்போது எதிர்த்து வாக்களிக்காமல் இருந்த கட்சிகள் தற்போது மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நாடு முழுவதும் குறிப்பாக மேற்குவங்கத்தில் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது
 
இந்த நிலையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவோர் வன்முறையில் ஈடுபடக் கூடாது என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்து மற்றும் ரயில்களுக்கு தீ வைத்துள்ளதை அடுத்து மம்தா இதனை தெரிவித்துள்ளார்.
 
மேலும் வரும் 19ஆம் தேதி நாடு தழுவிய போராட்டங்கள் நடத்த 60க்கும் மேற்பட்ட இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மசோதாக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 18ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்குவங்கம் போலவே அசாம் மாநிலம் குவஹாத்தியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உள்ளது. இருப்பினும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருப்பதால் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அஸ்ஸாம் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்போம் என்றும் மக்கள் வன்முறையில் இறங்க வேண்டாம் என்றும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியை கடத்தி சித்ரவதை: அண்ணன் – தம்பி கைது!