Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியுரிமை சட்டத்தால் பாஜக ஆட்சி கவிழ்கிறதா? திடுக்கிடும் தகவல்

Advertiesment
குடியுரிமை சட்டத்தால் பாஜக ஆட்சி கவிழ்கிறதா? திடுக்கிடும் தகவல்
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:00 IST)
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் மாணவர்களும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பகுதிகளில் பதட்டமான சூழ்நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் குடியிருப்பு சட்டத்துக்கு எதிராக அசாமில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை நடத்தி வருவதால் அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போலிஸ் மற்றும் இராணுவத்தினர் கலவரத்தை அடக்க தீவிர முயற்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் அசாமில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு அசாம் கண பரிஷத் ஆதரவு அளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு அசாம் கண பரீஷித்தின் எம்பிக்கள் ஆதரவாக ஓட்டுப் போட்ட நிலையில் தற்போது கட்சிக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது
 
webdunia
இதனை அடுத்து அசாம் கண பரிஷத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரபல்ல குமார் மகந்தா அவர்கள் இதுகுறித்து கூறிய போது ’குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தங்கள் கட்சி வாக்களித்தது தவறு தான் என்றும் தேவைப்பட்டால் தற்போது அசாமில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அசாமில் நடைபெற்று வரும் பாஜக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைக்கவசம் உயிர்கவசம், கார்களில் கட்டாயம் சீட்பெல்ட் என்பதனை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங்க் பேரணி