Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியுரிமை திருத்த சட்டம்..! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு..!!

supremecourt

Senthil Velan

, செவ்வாய், 19 மார்ச் 2024 (16:04 IST)
குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அண்மையில் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
இதனிடையே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு, காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.
 
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
ஏப்ரல் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி ஆலோசனை..!