கேராளாவில் கொரோனாவால் இறந்த இந்து மதத்தை சேர்ந்தவரின் உடலை எரிக்க கிறிஸ்தவ கல்லறையில் இடம் தரப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழகத்தை சேர்ந்தவரான இவர் கொரோனா பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். ஆனால் அவர் வாழ்ந்த எதாதுவா பகுதியில் தகனம் செய்யும் மேடை கிடையாது. மேலும் அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் எரிப்பதற்கு இடம் அமையாத பிரச்சினை இருந்துள்ளது.
இதனால் அங்குள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உடலை எரிக்க அனுமதி கேட்டுள்ளனர். சர்ச் பாதிரியார் மேத்யூ சூரவாடி அதற்கு ஒத்துக் கொள்ளவே கிறிஸ்தவ கல்லறையில் ஸ்ரீநிவாஸ் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடன் காலத்தில் மத நல்லிணக்கத்துடன் எரிக்க இடம் தந்த செயல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்ண்ட் ஜார் தேவாலயத்தை பாராட்டியுள்ளார்.