Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்பதிவு இன்றி ரயில் பயணம் செல்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

Advertiesment
முன்பதிவில்லா ரயில் டிக்கெட் | தெற்கு ரயில்வே | unreserved train tickets | unreserved railway passengers | Tamil Nadu Kerala | tamil nadu | southern railway | Puducherry | mobile app
, திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:54 IST)
முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எத்தகைய அவஸ்தைப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நிமிடக்கணக்கில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் முன்பதிவு இல்லாத பெட்டிகளை உட்கார இடம் தேடி ஓட வேண்டும். பல நேரங்களில் வெகுதூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்
 
இந்த நிலையில் முன்பதிவில்லா டிக்கெட் பயணிகளுக்கு உதவும் வகையில், மொபைல் ஆப் ஒன்றை ரயில்வே துறை உருவாக்கியுள்ளது.  R-Wallet எனப்படும் ஆன்லைன் வசதி மூலம் தங்களுடைய முன்பதிவில்லா ரயில்வே டிக்கெட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பெற்று கொள்ளலாம். ஏற்கனவே  புறநகர் ரயில் டிக்கெட்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுக்கள் ஆகியவைகளை பெற மொபைல் ஆப் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
webdunia
எனவே இனிமேல் முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் எடுக்க கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய வசதி பயணிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசைக்கு அந்த பயம் வேண்டாம்; சத்யராஜ் பதிலடி