இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படம் வரலாற்று களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் தனது சினிமா வாழ்வின் மோசமான காலகட்டத்தில் இப்போது இருக்கிறார். அதற்கு முக்கியமானக் காரணம் இந்தியன் 2 திரைப்படம். தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த ஷங்கர் இப்போது தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து அவர் உருவாக்கும் திரைப்படம் வரலாற்றுக் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை ஷங்கர் இயக்கிய படங்கள் சமூகப் படங்களாக இருந்த நிலையில் முதல் முறையாக வரலாற்றுப் புனைவு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.