Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்-1பி விசாவால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இங்கே வாருங்கள்.. சீனா அறிமுகம் செய்யும் K-விசா..!

Advertiesment
சீனா

Siva

, திங்கள், 22 செப்டம்பர் 2025 (07:59 IST)
அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைச் சாதகமாக பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள திறமைமிக்க ஊழியர்களை ஈர்ப்பதற்காக, சீனா K-விசா என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த புதிய விசா, அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படும் ஊழியர்களை இலக்காக கொண்டு இந்த விசா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம், இந்தியர்கள் உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த திறமையான ஊழியர்களை சீனாவுக்கு வரவழைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
 
சீனாவின் இந்த முயற்சி, திறமையான வெளிநாட்டு ஊழியர்களை தன்பக்கம் ஈர்த்து, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் தனது வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் சென்னையில் பொதுப்போக்குவரத்துக்கு ஒரே செயலி: 'Chennai One' பயன்கள் என்னென்ன?