கொல்கத்தாவில் உள்ள சைனா காளி கோவிலும், அதில் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரசாதமும் சமீப காலமாக வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் அதிக கோவில்கள் உள்ள இந்து மத கடவுள்களில் காளியும் ஒருவர். சிவனின் மனைவியான பார்வதி தேவியின் அவதாரமே காளி தேவி என்ற நம்பிக்கையும் மக்களிடையே உண்டு.
காளிக்கு நாடு முழுவதும் பல கோவில்கள் இருந்தாலும் கொல்கத்தாவில் உள்ள கோவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவில் பெயரே சைனா காளி தேவி கோவில்தானாம்.
கொல்கத்தாவின் சைனா டவுன் பகுதியில் உள்ள இந்த கோவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்களால் வழிபடப்பட்டு வந்ததாகவும், பின்னர் அங்கு குடியேறிய சீன மக்கள் தங்கள் முறைப்படியே காளி தேவியையும் வணங்கியதால் சைனா காளி கோவிலாக அது மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே நூடுல்ஸை பிரசாதமாக தரும் ஒரே கோவிலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.