Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - திருப்பதி ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:09 IST)
சென்னை - திருப்பதி ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. 
 
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில், மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 
 
இதே போன்று மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில், காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments