Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை, கோவைக்கு எத்தனையாவது இடம்?

Advertiesment
இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை, கோவைக்கு எத்தனையாவது இடம்?
, வெள்ளி, 5 மார்ச் 2021 (07:43 IST)
இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் சென்னை மற்றும் கோவை ஆகிய 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன
 
இந்தியாவில் வாழ தகுதியான நகரங்களின் முதல் இடத்தில் பெங்களூர் நகரம் இடம்பெற்றுள்ளது இதனை அடுத்து இரண்டாவதாக புனே, மூன்றாவதாக அகமதாபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன 
 
நான்காவது இடத்தில் சென்னை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இன்னொரு நகரமான கோவைக்கு ஏழாம் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் என்ற பத்து இடங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. அதேபோல் இந்திய தலைநகர் டெல்லிக்கு இந்த பட்டியலில் 13வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களுக்கு 3வது அணிமீது நம்பிக்கையில்லை: கே.எஸ். அழகிரி