ரசாயனம் கலந்திருப்பதாக சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கலால்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ல சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மதுப்பிரியர்கள் வாங்கி குடிக்கின்றனர்.
இந்த நிலையில், மதுப்பிரியர்களுக்கு பிரியமான பீர்களில் கிங் பிஸ்சர் நிறுவனத்தின் பீர்களுக்கு தனியிடம் உண்டு.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு என்ற பகுதியில் கிங் பிஷர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வந்த கிங் பிஷர் ஸ்டராங் பியர், கிங் பிஷர் அட்ரா வகை பீர்களில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதாக ஆய்வில் குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் பியரில் ரசாயனம் கலந்திருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில், ரூ.25 கோடி மதிப்பிலான பீர்களை கலால்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.