கர்நாடகாவில் குடிநீர் பாட்டில்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சரே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல பகுதிகளில் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் ப்ளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் கடைகளில் விற்கப்படுகிறது.
இந்நிலையில் குடிநீர் பாட்டில் குறித்து பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் ரசாயனம் கலப்பதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த மாதத்தில் மாநிலம் முழுவதும் 296 பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் 72 குடிநீர் பாட்டில்களில் இருந்த நீர் பாதுகாப்பானது என தெரிய வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் 95 பாட்டில் குடிநீர்கள் பாதுகாப்பற்றதாகவும், 88 பாட்டில் நீர் தரம் குறைந்தும் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் தரமற்ற குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் அந்த நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ள அவர், மக்கள் தண்ணீர் பாட்டில்கள் வாங்கும்போது அந்த ப்ராண்ட் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை அறிந்து வாங்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
Edit by Prasanth.K